/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மனு தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மனு
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மனு
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மனு
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மனு
ADDED : ஜூலை 01, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நான் கடந்த, 29 மாலை, மனைவி சரண்யா, 35, மற்றும் 11 வயது மகள், 9 வயது மகனுடன் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டூவீலரில் சென்றேன். அப்போது தெருவில் சுற்றி திரிந்த மாடுகள், பைக் மீது மோதி, என் மனைவி குழந்தைகளை முட்டி தள்ளியது. இதில், அவர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கிருஷ்ணகிரி நகருக்குள் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் முட்டி சிகிச்சை பெற்று வரும் மனைவி என் குழந்தைகளுக்கான மருத்துவசெலவு மற்றும் நிவாரணத்தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.