/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சிமாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி
ADDED : ஜூலை 25, 2024 01:39 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், பகுதிநேர கிரா-மிய கலை பயிற்சி நடக்கிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி-நேர கிராமிய கலை பயிற்சி கடந்த, 12ல், துவங்கப்பட்டு, கிராமிய கலைகளாகிய புரவியாட்டம், சேவையாட்டம், நாடகம், பம்பை ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சி நடந்து வருகிறது. இப்பயிற்-சியில், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம். வெள்ளி, சனி ஆகிய இரு நாட்கள் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டு பயிற்சி கட்-டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு தவில் ஆசிரியர் சீனிவாசன், மேற்பார்வையாளர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, கிருஷ்ணகிரி என்பவரை, 94439 10396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.