Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆக.,ல் கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி; தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தகவல்

ஆக.,ல் கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி; தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தகவல்

ஆக.,ல் கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி; தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தகவல்

ஆக.,ல் கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி; தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தகவல்

ADDED : ஜூலை 25, 2024 01:39 AM


Google News
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரியில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் ஆக., 2வது வாரத்தில் நடக்கவுள்ளது,'' என, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கூறினார்.கிருஷ்ணகிரியில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி, சென்னை சாலையில், பெத்தனப்பள்ளி பஞ்.,ல் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நேற்று அரங்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் நிரு-பர்களிடம் அவர் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு துறையின், 50 அரங்குகள், மேடைகள் அமைக்கும் பணி, 30 சதவீதம் முடிந்துள்ளது. பொழு-துபோக்கு அம்சங்கள், 80 தனியார் கடைகள், உள்ளிட்டவைக-ளுக்கு வரும், 29 ல் டெண்டர் விடப்படும். அதன்பின் கடைகள், விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணி வரும் வாரத்தில் நடக்கும். தேசிய நெடுஞ்சாலையோரம் கண்காட்சி நடக்க உள்-ளதால், போக்குவரத்திற்கு பாதிப்பின்றி பொதுமக்கள் வந்து செல்ல தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரு இடங்-களில் வாகனங்களை நிறுத்தவும், டிக்கெட் கவுன்டர்களும் அமைக்கப்பட உள்ளன.கண்காட்சியை இம்முறை வழக்கத்தை விட சிறப்பாக, விவசாயிக-ளுக்கு தினந்தோறும் கருத்தரங்கத்துடன், பொதுமக்களுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. பணி அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஆக., 2 வது வாரத்தில் மாங்கனி கண்காட்சி நடத்தலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், மாவட்ட கலெக்-டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ராஜா மோகன், வேளாண் அலுவலர் சீனிவாசன், கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உள்பட பலர் உடனிருந்தனர். மா சீசன் முடிந்த பின் நடக்க போகும் மாங்கனி கண்காட்சி யாருக்கும் பயனில்லை என, விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்-படுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us