/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பெற்றோர் வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பெற்றோர்
வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பெற்றோர்
வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பெற்றோர்
வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பெற்றோர்
ADDED : ஜூன் 19, 2025 01:25 AM
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே யு.சினிகிரிப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (ஆங்கில வழி) இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியையாக ஷைலஜாவும், தற்காலிக ஆசிரியையாக தமிழ்விழி உட்பட இருவரும் உள்ளனர். பள்ளியில், 39 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஆசிரியை தமிழ்விழியை, கீரனப்பள்ளிக்கு அரசு துவக்கப்பள்ளி கல்வித்துறை இடமாற்றம் செய்தது.
இந்நிலையில், மாணவ, மாணவியர், வகுப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள், நேற்று வைரலாகின. இதை பார்த்த பெற்றோர், பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார கல்வி அலுவலர் ஜார்ஜ் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானமடைந்த பெற்றோர், போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிக ஆசிரியை தமிழ்விழியை, அதே பள்ளியில் தொடரவும் உத்தரவிட்டார். மாணவர்கள் வகுப்பறையை சுத்தம் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, தலைமையாசிரியைக்கு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.