Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே மா விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்'

'தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே மா விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்'

'தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே மா விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்'

'தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே மா விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்'

ADDED : ஜூன் 19, 2025 01:25 AM


Google News
கிருஷ்ணகிரி, தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே, 'மா' விவசாயிகளின் பிரச்னைகள் தீரும் என, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில், மாங்காய்க்கு கூடுதல் விலை கேட்டு கடந்த, 2 மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். மேலும், 'மா' ஒரு டன்னுக்கு ஆந்திரா அரசு வழங்குவது போல், 8,000 ரூபாய், அரசு மானியமாக டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். 'மா' வாரியம் அமைக்க வேண்டும்.

'மா' ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடாக, 30,000 ரூபாய் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி., 18 சதவீதம் என்பதை நீக்க வேண்டும். சத்துணவில், 'மா' பழச்சாறு சேர்க்க வேண்டும். மாங்கூழ் தொழிற்சாலைகள் வேளாண் சார்ந்த தொழில் என்பதால், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, பலமுறை தமிழக அரசுக்கு முறையிட்டு வந்துள்ளோம்.

தமிழக முதல்வர் மட்டுமே இப்பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று கோரிக்கை வைத்திருந்தும், மாங்கூழ் தொழிற்சாலைகளை இயக்க வைக்கின்றோம் என, தமிழக அரசு செயலாளரின் ஒற்றை வரி அறிக்கையால் எந்த பலனும் இல்லை. தொழிற்சாலையை தயார் படுத்தவே, 3 மாதம் தேவை என்ற நிலையில், இந்த வெற்று அறிக்கையால், 'மா' விவசாயிகளின் பிரச்னைகள் தீரப்போவதில்லை. இதனால் மாநிலம் முழுவதும், 'மா' விவசாயிகள், அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, தமிழக முதல்வர் உடனே இப்பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us