/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிசமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி
சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி
சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி
சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி
ADDED : ஜூலை 04, 2024 11:59 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மைக்கொட்டாய் அரசு உயர்நி-லைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தலைமையாசிரியை மணிமேகலை தலைமை வகித்து பேசுகையில், “சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் குறித்து மாணவர்களாக நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்-சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து, உங்கள் வீட்டிலும் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களிடமும் கூற வேண்டும்,” என்றார்.தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை, காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நாட்டாண்மைகொட்டாய் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரி-சுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஏ., தலைவர் பெருமாள், போலீசார் மீனாட்சி, அன்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.* ஓசூர் சமத்துவபுரம் உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசி-ரியர் ராஜாராம் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், மாணவர்கள் போதை பொருட்கள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு உறுதிமொழிகளையும் வாசித்தனர். ஓசூர் மாநகராட்சி, 6வது வார்டு கவுன்சிலர் மம்தா சந்தோஷ், சமூக ஆர்வலர் ராதா, ஆசிரியர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.