/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணிசேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி
சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி
சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி
சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி
ADDED : ஜூலை 04, 2024 11:59 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் முதல்போக பாசனத்திற்-காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இந்நிலையில் கே.ஆர்.பி., அணையின் இடதுபுற வாய்க்கால் பகுதியில் பெரிய-முத்துார் பஞ்.,ல் உள்ள கிளை வாய்க்காலின் ஷட்டர் முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் தேங்காத நிலையில் இருந்தது. இதைய-டுத்து அந்த ஷட்டரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி பொறியாளர் சையத் கூறுகையில், “கே.ஆர்.பி., அணையின் கிளை வாய்க்கால்-களில் மிகவும் சேதமான நிலையிலுள்ள ஷட்டர்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்த கிளை வாய்க்கால்களின் ஷட்-டர்கள் குறித்து பொதுமக்களும் தெரிவிக்கலாம்,” என்றார்.