/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாசாணியம்மன் கோவிலில் மயானகொல்லை பூஜைமாசாணியம்மன் கோவிலில் மயானகொல்லை பூஜை
மாசாணியம்மன் கோவிலில் மயானகொல்லை பூஜை
மாசாணியம்மன் கோவிலில் மயானகொல்லை பூஜை
மாசாணியம்மன் கோவிலில் மயானகொல்லை பூஜை
ADDED : பிப் 25, 2024 04:12 AM
ஓசூர்: ஓசூர் அருகே சமத்துவபுரத்தில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், 7ம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா மற்றும் அலகு குத்தும் விழா கடந்த, 9 ல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மேல் மயான கொல்லை பூஜை நிகழ்ச்சி நடந்தது. கோவில் அருகே விழா திடலில் களிமண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தன.
அப்போது அருள் வந்து ஆடிய கோவில் பூசாரி, சுடுகாட்டு மனித எலும்பை வாயில் கடித்தபடி அருள்வாக்கு கூறினார். மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை சுற்றி வந்த பூசாரி, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார். அதன் பின்னர் சிலையின் மேலிருந்து எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருள்களை பக்தர்கள் பிரசாதமாக பெற்று சென்றனர். பேய், பிணி, பீடைகள் விலகவும், நோய்களிலிருந்து தங்களை காக்கவும் பொதுமக்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர்.
இதில், ஓசூர் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.