நிதீஷ், சந்திரபாபுவை வளைத்து போட முயற்சியா?: இல்லை என சாதிக்கிறார் சரத்பவார்
நிதீஷ், சந்திரபாபுவை வளைத்து போட முயற்சியா?: இல்லை என சாதிக்கிறார் சரத்பவார்
நிதீஷ், சந்திரபாபுவை வளைத்து போட முயற்சியா?: இல்லை என சாதிக்கிறார் சரத்பவார்
ADDED : ஜூன் 05, 2024 01:02 PM

புதுடில்லி: 'நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபுவை வளைத்து போட சரத்பவார் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரிடம் நான் இதுவரை பேசவில்லை' என மஹா., முன்னாள் முதல்வர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு மொத்தம் 272 இடங்கள் தேவை என்பதால், இண்டியா கூட்டணிக்கு 38 இடங்கள் குறைவாக உள்ளன. இந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக கூட்டணி மாறி ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள், 'கிங் மேக்கர்' என்ற அந்தஸ்தை பெறுகின்றனர்.
இந்த முறை, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நிதீஷ், சந்திரபாபு மற்றும் சில சுயேச்சைகளை, தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேரத்தில் இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரை மஹா., முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், ‛‛அடுத்த கட்ட நகர்வு குறித்து இண்டியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஆதரவு கேட்டு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இதுவரை தொடர் கொண்டு நான் பேசவில்லை. அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் இன்று விவாதிப்போம்'' என சரத்பவார் தெரிவித்தார்.