ADDED : ஜூன் 17, 2024 01:46 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அருகே, ஊர் மாரியம்மன் மற்றும் மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே, கும்மனுார் கிராமத்தில் பழமையான ஊர் மாரியம்மன் மற்றும் மண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த, 14 ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 2ம் மற்றும் 3ம் கால பூஜை, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜை, 4ம் யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, ஊர் மாரியம்மன், மண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கேதர்நாத், பத்ரிநாத், ராமேஸ்வரம், ரிஷிகேஷ், பஞ்சகேதார், தனுஷ்கோடி, திருச்செந்துார், ஈரோடு கூடுதுறை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, புனிதநீர் கொண்டு வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு, 324 விசேஷ திரவிய கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.