வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : மே 24, 2025 01:22 AM
பாகலுார் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர்நாத், 26. ஓசூர் அருகே சேவகானப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் பனியா, 33, என்பவர் வசிக்கிறார். கடந்த, 21ம் தேதி, நிர்மல் பனியா வீட்டின் முன், பாஸ்கர்நாத் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். இது குறித்து நிர்மல் பனியா கேள்வி எழுப்பியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் பனியா, கத்தியால் பாஸ்கர்நாத்தை வயிற்று பகுதியில் குத்தினார். இதில் காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஸ்கர்நாத் புகார்படி, பாகலுார் போலீசார் வழக்குப்பதிந்து, நிர்மல்பனியாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.