Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்று மோசடி: ஒருவர் கைது

கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்று மோசடி: ஒருவர் கைது

கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்று மோசடி: ஒருவர் கைது

கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்று மோசடி: ஒருவர் கைது

ADDED : ஜூன் 12, 2025 02:22 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த, மத்தகிரி பஞ்., குள்ள ரெங்கம்பட்டியை சேர்ந்தவர் தங்க

ராசு, 48, லாரி டிரைவர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நித்தீஸ்வரன், 2023-24ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தார். தன் மகனை பொறியியல் கல்லுாரியில் சேர்ப்பதற்காக, தரகம்பட்டியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் சந்திரசேகர், 40, என்பவரிடம் உதவி கேட்டார்.

அப்போது சந்திரசேகரன், எனக்கு தெரிந்து நிறைய கல்லுாரி

கள் உள்ளன; அதில், ஏதாவது ஒரு கல்லுாரியில் உன் மகனுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இவரது ஆசை வார்த்தையை நம்பி, தனது மகன் படிப்பிற்காக, 55 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்தார். சந்திரசேகரன் கோவையில் உள்ள, ஒரு தனியார் கல்லுாரியில் பொறியியல் பாடப்பிரிவில் அட்மிஷன் போட்டு தருவதாக கூறியுள்ளார்.

அந்த கல்லுாரியில் மகன் படிக்க விரும்பவில்லை, வேறு கல்லுாரி

யில் சேர்த்து விடவும் என கூறியதன் பேரில், கோவையில் உள்ள மற்றொரு தனியார் டெக்னாலஜி கல்லுாரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்க்க, இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் கல்லுாரி

யில் நித்தீஸ்வரனுக்கு இடஒதுக்கீடுபடி சேர்க்கையில் சேர்ந்தார். மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க வாங்கிய பணத்தை, சந்திர

சேகர் திருப்பி தரவில்லை. இதையடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாக, தங்கராசு அளித்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார்

வழக்குப்பதிவு செய்து சந்திர

சேகரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us