Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ADDED : ஜூலை 26, 2024 08:25 PM


Google News
கிருஷ்ணகிரி:கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 51 அடியை எட்டிள்ளதால், மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, இரு மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்ததாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 23 நாட்களாக தண்ணீர் திறப்பாலும் கடந்த, 15ல் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. தொடர்ந்து ஒரே சீராக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், 11 நாட்களுக்கு பிறகு நேற்று, 51 அடியை எட்டியது.

அணைக்கு வினாடிக்கு, 250 கன அடிநீர் வந்து கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சாத்தனுார் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், பெரிய முத்துார், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டள்ளி, தளிஹள்ளி என, எட்டு கிராமங்களுக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

-------------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us