/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.20 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கும்பல் கைதுரூ.20 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கும்பல் கைது
ரூ.20 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கும்பல் கைது
ரூ.20 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கும்பல் கைது
ரூ.20 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கும்பல் கைது
ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
ஓசூர்: ஓசூரில், 20 லட்சம் ரூபாய் கேட்டு, ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில், கடத்தலுக்கு திட்டம் தீட்டிய நண்பர் உட்பட, 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதியை சேர்ந்தவர் பீரேஷ், 34. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்; ஓசூர் தின்னுார் ஆர்.கே., அவென்யூவை சேர்ந்தவர் முரளி, 36; இருவரும் நண்பர்கள். பீரேஷ் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக பணம் சம்பாதித்துள்ளதால், அவரை கடத்தி பணம் பறிக்க, முரளி மற்றும் அவரது தரப்பினர் திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த, 7 நள்ளிரவு, 12:30 மணிக்கு, வீட்டின் அருகே இருந்த பீரேஷை, மாருதி சுசூகி காரில், முரளி தரப்பினர் கிருஷ்ணகிரிக்கு கடத்தினர். இந்நிலையில் பீரேஷின் மனைவி ரேணுகா, 30, கணவரை காணவில்லை என, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதற்கிடையே, ரேணுகாவிற்கு போன் செய்த கடத்தல் கும்பல், 'பீரேஷை கடத்தி வைத்துள்ளோம், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம்' என மிரட்டியது. இதையறிந்த மத்திகிரி போலீசார் உஷார் படுத்தப்பட்டு, பீரேஷை தேடினர்.
வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தருவதாக கடத்தல் கும்பலிடம் பீரேஷ் கூறியுள்ளார். அதன்படி, நேற்று காலை, 6:30 மணிக்கு அந்திவாடி சோதனைச்சாவடி அருகே, பீரேஷை கடத்திய கும்பல் காரில் வருவதையறிந்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், மிடிகிரிப்பள்ளி பிரிவு சாலை அருகே காரை மடக்கி, பீரேஷை மீட்டனர்.
காரிலிருந்த, 5 பேரை விசாரித்தபோது, பீரேஷின் நண்பர் முரளி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோவில்பட்டி சதீஷ், 32, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மதிவாணன், 33, சேலம், சீலநாயக்கன்பட்டி பார்த்தசாரதி, 32, கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனி அமில்தாஸ், 28, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர். பீரேஷ் கடத்தப்பட்ட, 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.