/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கடத்தல் சுவாமி சிலைகள் மடக்கியது கர்நாடக போலீஸ்கடத்தல் சுவாமி சிலைகள் மடக்கியது கர்நாடக போலீஸ்
கடத்தல் சுவாமி சிலைகள் மடக்கியது கர்நாடக போலீஸ்
கடத்தல் சுவாமி சிலைகள் மடக்கியது கர்நாடக போலீஸ்
கடத்தல் சுவாமி சிலைகள் மடக்கியது கர்நாடக போலீஸ்
ADDED : ஜன 03, 2024 10:31 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம் மேடு பகுதியில், சுவாமி சிலைகள், உண்டியல்கள், குத்துவிளக்குகள், கோபுர கலசங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகள், குத்துவிளக்குகளை திருடினர். கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு லாரியில் கடத்திச் சென்று கொண்டிருந்தனர். இரவில், அத்திப்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அந்த லாரியை போலீசார் நிறுத்தியபோது, டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு, இருவர் இறங்கி தப்பியோடினர். சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகள், குத்துவிளக்கு, உண்டியல், கலசங்கள் இருந்தன.
அவற்றை ஓசூரிலிருந்து திருடி பெங்களூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பியவர்களை தேடுகின்றனர்.