Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

காலபைரவர் கோவில் கும்பாபிஷேகம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

ADDED : ஜூலை 09, 2024 06:04 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கல்லுகுறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. இன்று (ஜூலை 9) காலை, 11:00 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், நாளை காலை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகியவையும் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், முதல்கால யாகசாலை பூஜை, கலச பிரதிஷ்டை, பூர்ண கும்ப பிரதிஷ்டை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, 2ம் கால யாகசாலை பூஜையும், இரவு, காலபைரவ சுவாமிக்கு அஸ்டபந்தனம் மருந்து சாற்றுதலும் நடக்கிறது.

வரும், 12 காலை, பல்வேறு ஹோமங்கள், பூர்ண கும்ப கலச புறப்பாடு ஆகியவை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், விநாயகர், பைரவ லிங்கம், மஹாநந்தி, கஜலட்சுமி, நவகிரகம், காலபைரவ சுவாமிக்கு, ஜீர்ணோதர்ண மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us