/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புகே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, காவேரிப்பட்டணத்தில் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் பள்ளி விட்டு வீட்டுக்கு சென்ற மாணவ, மாணவியர், மழையில் நனைந்தபடி சென்றனர். அதே போல், கிருஷ்ணகிரியில் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது.கடந்த, 2 நாட்களாக பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 173 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 281 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம், 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 47.25 அடியாக இருந்தது.நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில், 54.70 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், போச்சம்பள்ளி, 20, கிருஷ்ணகிரி, 16.30, பாரூர், 15.20, கெலவரப்பள்ளி அணை, 11.20, பாம்பாறு அணை, 11, ஓசூர், 6.30, சூளகிரி, 3, சின்னாறு அணை, நெடுங்கல் தலா, 2, கே.ஆர்.பி., அணை, 1.80, ஊத்தங்கரை, 1, என மொத்தம், 144.50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.