/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொடர் மழையால் நிரம்பிய அவதானப்பட்டி ஏரி; வெளியேறும் நீரால் விவசாயிகள் மகிழ்ச்சிதொடர் மழையால் நிரம்பிய அவதானப்பட்டி ஏரி; வெளியேறும் நீரால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நிரம்பிய அவதானப்பட்டி ஏரி; வெளியேறும் நீரால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நிரம்பிய அவதானப்பட்டி ஏரி; வெளியேறும் நீரால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நிரம்பிய அவதானப்பட்டி ஏரி; வெளியேறும் நீரால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 21, 2024 07:18 AM
கிருஷ்ணகிரி: தொடர் மழையால் அவதானப்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் இடதுபுற வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர், அவதானப்பட்டி ஏரி வழியாக பாளேகுளி ஏரிக்கு செல்கிறது.
தற்போது, இரண்டாம் போக சாகுபடி முடிந்து, வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாத துவக்கத்தில் 10 நாட்களும், கடந்த, 4 நாட்களாக பெய்து வரும் கன மழையால் அவதானப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி முழு கொள்ளளவு நிரம்பி, தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் வாய்க்கால் மூலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து திம்மாபுரம் ஏரிக்கு செல்கிறது. இதனால் அவதானப்பட்டி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'அக்ரஹாரத்தை ஒட்டிய மலை பகுதிகளில் பெய்த மழையால் கானாற்றில் சென்ற தண்ணீர், அவதானப்பட்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் அவதானப்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் செல்லும் வாய்க்காலில் செடிகள், முட்புதர்கள் மற்றும் குப்பை உள்ளதால், தண்ணீர் சீராக செல்வதில்லை. எனவே, அவதானப்பட்டி ஏரியில் இருந்து திம்மாபுரம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.