/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றிமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி
ADDED : ஜூன் 29, 2024 02:13 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதன் மூலம் காய்கறி, மலர், கிரானைட், மாங்கூழ் ஏற்றுமதியாளர்கள், மின்சார இருசக்கர வாகன உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தொழில்துறை அமைச்சர் ராஜா, கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை, ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ் நேரில் சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.