/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சென்னானுார் அகழாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரை சென்னானுார் அகழாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரை
சென்னானுார் அகழாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரை
சென்னானுார் அகழாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரை
சென்னானுார் அகழாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரை
ADDED : ஜூன் 28, 2024 11:44 PM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, குன்னத்துார் பஞ்., சென்னானுார் மலையடிவாரத்தில் அகழாய்வு நடக்கிறது.
இங்கு, ஏற்கனவே பழங்கால பானை ஓடுகள், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், உடைந்த புதிய கற்கால கைக்கோடரி போன்ற வரலாற்றுக் கால எச்சங்கள் கிடைத்தன.
இதனால் இந்த இடம், சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என்பதால், அகழாய்வு பணி நடந்து வருகிறது. கடந்த, 24ல், உடைந்த புதிய கற்கால வெட்டு கற்கருவி கிடைத்தது. இக்கருவி, 4,000 ஆண்டு கள் பழமையானது.
தற்போது, களிமண்ணால் ஆன சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இது, 4.5 செ.மீ., நீளம், 3.2 செ.மீ., அகலம் கொண்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன், பானையின் விளிம்புப் பகுதியை அழகுபடுத்த, இந்த முத்திரை பயன்படுத்தியிருக்கலாம் என, அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் தெரிவித்தார்.
அதுபோல, விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி என, 200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று நடந்த அகழாய்வில் எலும்புகள், உடைந்த மண்பானை குவியல் கண்டெடுக்கப்பட்டது.