ADDED : ஜூலை 22, 2024 12:29 PM
ஓசூர்: கெலமங்கலம் கணேஷ் காலனி சாய்பாபா கோவில் தெருவில், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி கோவில் உள்ளது. இங்கு, சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதிகாலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், 5:15 மணிக்கு வேதபாராயணம், நகர சங்கீர்த்தனம், 7:15 மணிக்கு கணபதி, நவக்கிர, குரு பூஜை நடந்தது. தொடர்ந்து சாய்பாபா மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை, கீதா பாராயண ஹோமம், மகா மங்கள ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, 8:30 மணிக்கு பிரசாத வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
போராட்டத்தில் பங்கேற்க டிட்டோஜாக் ஆயத்த மாநாடு
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 29 முதல், 31 வரை மூன்று நாட்கள் சென்னையில் டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான ஆயத்த மாநாடு நேற்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.
அதன்படி, கிருஷ்ணகிரியில் நடந்த ஆயத்த மாநாட்டிற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜகோபால், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
கூட்டத்தில், வரும், 29ல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் பெருள் திரளாக கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.