Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.2,000 கோடியில் திட்டப்பணிகள், நல உதவிகள்

கிருஷ்ணகிரியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.2,000 கோடியில் திட்டப்பணிகள், நல உதவிகள்

கிருஷ்ணகிரியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.2,000 கோடியில் திட்டப்பணிகள், நல உதவிகள்

கிருஷ்ணகிரியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.2,000 கோடியில் திட்டப்பணிகள், நல உதவிகள்

ADDED : செப் 14, 2025 04:52 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று நடக்கவுள்ள அரசு விழாவில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் அமைந்துள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் அரசு விழா இன்று (ஞாயிற்றுக்கி-ழமை) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க வரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையி-டுகிறார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்-ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரை-யாடுகிறார். அதன் பின் அவர், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்ப-ணிகளை திறந்து வைத்தும், நல உதவிகளை வழங்கியும் பேசு-கிறார்.

முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் வந்து இறங்கும், ஓசூர் பேள-கொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் அரசு விழா நடக்கக்கூடிய கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரி ஆகிய இடங்களை மையமாக கொண்டு, 2 கி.மீ., சுற்றளவில், 'சிவில் ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்-டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி, 'ட்ரோன்'களை இயக்கும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us