/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்'டுடன் மாணவர்களை வரவேற்ற அரசு துவக்கப்பள்ளிஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்'டுடன் மாணவர்களை வரவேற்ற அரசு துவக்கப்பள்ளி
ஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்'டுடன் மாணவர்களை வரவேற்ற அரசு துவக்கப்பள்ளி
ஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்'டுடன் மாணவர்களை வரவேற்ற அரசு துவக்கப்பள்ளி
ஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்'டுடன் மாணவர்களை வரவேற்ற அரசு துவக்கப்பள்ளி
ADDED : ஜூன் 12, 2024 06:56 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே, அரசு தொடக்கப்பள்ளியில் சேரவரும் மாணவர்களுக்கு ஆளுயர பொம்மை, 'செல்பி ஸ்பாட்' அமைத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கே.பூசாரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, சிறப்பான வரவேற்பளிக்க, ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, குழந்தைகளை கவரும் வகையில் பள்ளி முகப்பில், ஆளுயர பொம்மை வைத்து, இனிப்பு, மலர்கள் கொடுத்து, மாணவர்களை வரவேற்றனர். பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை, தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து வணங்குவது, தட்டில் அரிசியை நிரப்பி, 'அ' எழுத செய்வது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும் பொம்மைகள், அலங்கரித்த பிரேம் முன் நின்று, மொபைலில்,'செல்பி' எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நின்று, 'செல்பி' எடுத்து கொண்டனர். பள்ளிக்கு வந்த மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி பள்ளி சேர்க்கைக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்களை பாராட்டினார். 'செல்பி ஸ்பாட்'டில் நின்று போட்டோவும் எடுத்து கொண்டார். தொடர்ந்து, புதிய மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கியும், பள்ளியல், 5ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தினார்.
காட்டிநாயனப்பள்ளி பஞ்., தலைவர் மஞ்சுளா வெங்கடேசன், ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் வடிவேலு, பள்ளி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரம்யா, மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.