ADDED : ஜூலை 16, 2024 01:50 AM
ஓசூர்: ஓசூர், பிரம்மமலை பின்புறமுள்ள மலை அடிவாரத்தில், வராகி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு தெலுங்கு, கன்னட மக்களின், 'ஆஷாடா' மாதத்தையொட்டி கடந்த, 6ல், நவராத்திரி விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், மலர், மாதுளை, முத்து, இனிப்பு, காய்கறி, பழங்களில் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் நாணயத்தில், வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் பங்கேற்ற கும்மியாட்டம் நடந்தது. ஓசூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.