/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளைஅடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
அடுத்தடுத்து 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பஞ்., கெட் டம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா, 52; இவர் கணவர் ராமச்சந்திரன், பெங்களூருவில் ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, 12ல் சித்ரா, வீட்டை பூட்டி விட்டு, கணவரை பார்க்க பெங்களூரு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த, 40 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது.மேலும், அதே பகுதியில் கெவரப்பன், 65, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த, 10 பவுன் நகை மற்றும் 2,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த, 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும், மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.