/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசளிப்புகாமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசளிப்பு
காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசளிப்பு
காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசளிப்பு
காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசளிப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
ஓசூர்: ஓசூர், காமராஜ் காலனியிலுள்ள அரசு மாநகராட்சி நடுநிலைப்-பள்ளியில், காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். மேலும், காமராஜரை ஓவியமாக வரைந்த, 3 மாணவர்களுக்கு தலா, 500 ரூபாய் பரிசாக வழங்கினார். * கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். தலைமை-யாசிரியர் மகேந்திரன் வரவேற்றார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்ச்சியும், கடந்தாண்டில், 10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற, 4 பேருக்கு அரிமா சங்கம் சார்பில் ஊக்-கத்தொகையும் வழங்கப்பட்டது.* மத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் முதல் ழூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்-களை கவுரவிக்கும் வகையில் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக, பள்ளிக்கு, 20,000 ரூபாய் மதிப்புள்ள ஒலிபெருக்கி வழங்கப்பட்டது. இதில் தலைமையாசி-ரியர் வாசுதேவன், பி.டி.ஏ., தலைவர் கணேஷ்குமார், தொழில-திபர் மாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.