/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காலை சிற்றுண்டி திட்டத்தில் 76,339 மாணவ, மாணவியர் பயன்காலை சிற்றுண்டி திட்டத்தில் 76,339 மாணவ, மாணவியர் பயன்
காலை சிற்றுண்டி திட்டத்தில் 76,339 மாணவ, மாணவியர் பயன்
காலை சிற்றுண்டி திட்டத்தில் 76,339 மாணவ, மாணவியர் பயன்
காலை சிற்றுண்டி திட்டத்தில் 76,339 மாணவ, மாணவியர் பயன்
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் எலத்தகிரியில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்ட துவக்க விழா நடந்தது.
கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசுகையில், ''கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம், 1,385 ஊராட்சி துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் செயல்ப-டுத்தப்பட்டு, 75,322 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.தற்போது ஊரக பகுதிகளிலுள்ள அரசு உதவிபெறும் துவக்கப்-பள்ளிகளிலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்-படி, 8 ஊரக அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும், 1,017 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதனால் மாவட்டத்தில், 1,393 பள்ளிகளில் பயிலும், 76,339 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரசன்ன வெங்கடேசன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நமது மாதா துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும், மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு-ரெட்டி, மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.