/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/எண்ணேகொள்புதுார் ஊர் திருவிழா பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்எண்ணேகொள்புதுார் ஊர் திருவிழா பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
எண்ணேகொள்புதுார் ஊர் திருவிழா பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
எண்ணேகொள்புதுார் ஊர் திருவிழா பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
எண்ணேகொள்புதுார் ஊர் திருவிழா பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : ஜூன் 13, 2024 07:04 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் எண்ணேகொள்புதுார் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், செந்தியம்மன், சாமுடியம்மன், பொன்னியம்மன், ஊர் மாரியம்மன், முத்து மாரியம்மன், ராமசாமி, போலுமலை திம்மராயசுவாமி, செல்லாபுரியம்மன், படவட்டம்மன் கோவில் ஊர் பண்டிகை கடந்த, 6ல் பந்தகால் கொடி ஏற்றுதல், பொன்னேர் கட்டுதல், மண்டு மற்றும் ஊர் சாட்டுதல் ஆகியவற்றுடன் துவங்கியது.
கடந்த, 7 முதல், 11 வரை தினமும், ஈஸ்வரன் கோவில், பெருமாளப்பன், மண்டு மாரியப்பன் கோவில், காளியம்மன், செல்லாபுரியம்மன், பட்டாளம்மன், குட்டுகாரப்பன் கோவில், பொத்தல் பைரப்பன் கோவில், பச்சையம்மன் கோவில், சென்றாய சாமுடி சுவாமி கோவில், காட்டிராஜா கோவில், மந்தகொல்லை கோவில், ஊர் மாரியம்மன், ஒன்டிக்கழனி முனியப்பன், புளாரப்பன் கோவில், ஆற்றங்கரை செந்தியம்மன், முருகர் கோவில், விநாயகர், செந்தியம்மன், சாமுடியம்மன், பொன்னியம்மன், முத்துமாரியம்மன், ராமசாமி, போலுமலை திம்மராய சுவாமி, மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு மாவிளக்கு எடுத்தனர்.
நேற்று காலை, மாவிளக்கு எடுத்தல் மற்றும் மண்டு கரகம் தலை கூடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இன்று எருது விடும்
திருவிழாவும், நாளை, எருது கட்டும் திருவிழாவும் நடக்க உள்ளது.