/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாக்கடை கால்வாயை மூடாததால் சாலையை கடக்க முடியாமல் அவதிசாக்கடை கால்வாயை மூடாததால் சாலையை கடக்க முடியாமல் அவதி
சாக்கடை கால்வாயை மூடாததால் சாலையை கடக்க முடியாமல் அவதி
சாக்கடை கால்வாயை மூடாததால் சாலையை கடக்க முடியாமல் அவதி
சாக்கடை கால்வாயை மூடாததால் சாலையை கடக்க முடியாமல் அவதி
ADDED : ஜூன் 03, 2024 07:19 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்த நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முக்கிய சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்காமல், சாக்கடை கால்வாயை மட்டும் கட்டியுள்ளதால், குறுக்கிலுள்ள தெருக்களுக்கு பொதுமக்கள் வாகனத்தில் சென்று வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்காலிகமாக சாலையின் மீது சிலாப் அமைக்க வேண்டும் என்றும், சாலை நடுவேயுள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பஞ்., நிர்வாகம், நாங்கள் கால்வாயை மட்டும்தான் கட்டித் தருவோம். அதன்மீது சிமென்ட் சிலாப்புகளை நீங்கள்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என, பதிலளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தெருக்களின் குறுக்கில், கால்வாய் அமைக்கும்போது, அதன்மீது கல்வெட்டு அமைக்க வேண்டும். அல்லது அதன்மீது சிமென்ட் சிலாப் அமைத்துத்தர வேண்டும். ஆனால் பஞ்., நிர்வாகம் கால்வாயை மட்டும் அமைத்துவிட்டு, சிமென்ட் சிலாப்புகளை பொதுமக்களை அமைத்துக் கொள்ள சொல்லியுள்ளனர். இதனால், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாகனத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.