Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

அரசு அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

அரசு அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

அரசு அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

ADDED : ஜூலை 05, 2025 01:20 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு

அருங்காட்சியத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காலமு, வரலாறும் என்ற தலைப்பில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.காரிமங்கலம் அரசு மகளிர் கல்லுாரியின் வரலாறு மற்றும் தமிழ்துறை மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை, ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு தொல்லியல் அலுவலர் பரந்தாமன், 'கிருஷ்ணகிரி மாவட்ட அகழாய்வுகள் காட்டும் வரலாறு' என்ற தலைப்பில் பேசியதாவது:

இதுவரை அகழாய்வு மேற்கொண்டதில், மயிலாடும்பாறையில், 4,100 ஆண்டு பழமையான இரும்பினால் செய்த வாள் மற்றும் சுடுமண்ணால் செய்த பொருட்கள் கிடைத்துள்ளது. சென்னானுார் அகழாய்வில், 500க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அகழாய்வு மூலம், தமிழகத்தின் பிறபகுதிகளில் நுண்கற்காலம் முதல் தற்காலம் வரை தொடர்ச்சியான வரலாறு கிடையாது. இம்மாவட்டத்தில் மட்டுமே இத்தொடர்ச்சி உள்ளது.

தமிழகத்தின் தென்பகுதியில் மட்டுமே கிடைத்த தமிழி எழுத்து, தற்போது மயிலாடும்பாறை மற்றும் சென்னானுார் பகுதியில் கிடைத்திருப்பதால், தமிழகம் முழுமையும் தமிழ் பரவி இருப்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் மல்லப்பாடியில்தான் முதல் பாறை ஓவியம்

கண்டறியப்பட்டது.

இவ்வாறு பேசினார்.

காப்பாட்சியர் சிவக்குமார், வரலாற்று ஆர்வலர்கள் மனோகரன், தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us