/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி சொத்துக்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அமீனா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி சொத்துக்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அமீனா
ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி சொத்துக்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அமீனா
ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி சொத்துக்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அமீனா
ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி சொத்துக்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அமீனா
ADDED : ஜூன் 05, 2025 02:29 AM
ஓசூர், ஓசூரில், சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 20.83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காமல், மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்த நிலையில், நேற்று ஜப்தி நடவடிக்கைக்கு நீதிமன்ற அமீனா வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, பாகலுார் ராஜிவ்காந்தி நகரில் வசித்தவர் விவேகானந்தன், 34. வீட்டின் அருகே சிறிய தொழிற்சாலை நடத்தி வந்தார். கடந்த, 1996 டிச., 2ல், தன் நண்பர் பாரதி என்பவருடன் பெங்களூரு சென்று விட்டு, அன்றிரவு ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்பகுதி
யில் நிறுத்தியிருந்த பைக்கை எடுக்க சென்றவர், திறந்தநிலை சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, விஷ வாயு தாக்கி மயக்கமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். ஓசூர் மாநகராட்சி (அப்போதைய நகராட்சி) உரிய இழப்பீடு வழங்கக்கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விவேகானந்தன் மனைவி சாந்தி வழக்கு தொடர்ந்தார். கீழமை நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் கடந்த, 2001ல் சாந்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த, 2015 ஜன, 9ம் தேதி, மாநகராட்சி நிர்வாகம் சாந்திக்கு, 6.65 லட்சம் ரூபாய் இழப்பீடும், அதற்கு, 2001 முதல் கணக்கிட்டு, 9 சதவீத வட்டியும் வழங்க தீர்ப்பளித்தது. ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், கடந்த, 2017ல், ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், கடந்த சில ஆண்டுக்கு முன், மாநகராட்சியின் அசையும் சொத்துக்குகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இருந்தும் மாநகராட்சி இழப்பீடு வழங்கவில்லை. நேற்று வரை வட்டியுடன் சேர்த்து, 20.83 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியிருந்தது. அதனால், ஓசூர் நீதிமன்ற அமீனாவுடன், சாந்தி மற்றும் அவரது மகன் முத்துக்குமார், வக்கீல் ஞானசேகரன் ஆகியோர், ஓசூர் மாநகராட்சியிலுள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய வந்தனர்.
சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம், மாநகராட்சி கமிஷனர் மாரிச்செல்வி, ஒரு வாரத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.