/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா
ADDED : ஜூன் 06, 2025 01:09 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், நவநீத வேணுகோபால சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலய பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, புண்யாவாசனம், கலச ஸ்தாபனம், வாஸ்து ஹோமம், இரவு, 9:00 மணிக்கு, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், கலச ஆராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.