/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தி செல்ல முயற்சி காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தி செல்ல முயற்சி
காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தி செல்ல முயற்சி
காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தி செல்ல முயற்சி
காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தி செல்ல முயற்சி
ADDED : ஜூன் 30, 2025 03:40 AM
ஓசூர்: கர்நாடகா எல்லையில், காதல் திருமணம் செய்த தம்பதியை, பெண்ணின் வீட்டார் காரில் கடத்தி செல்ல முயன்றனர்.
கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே, குட்ட-ஹட்டி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய், 25. இவரும், அதே பகு-தியை சேர்ந்த திவ்யா, 23, என்பவரும் காதலித்து, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு, திவ்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் திவ்-யாவின் தந்தைக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக கூறி, அவரை தனியார் மருத்துவ
மனைக்கு வர, குடும்பத்தினர் அழைத்துள்ளனர்.
அதை நம்பிய திவ்யா, கணவர் சஞ்சய் மற்றும் அவரது தங்கை ஆகியோருடன் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார். அப்-போது, 2 கார்களில், திவ்யாவின் குடும்பத்தினர் பின்தொடர்ந்து வந்து, பைக் மீது, காரை வைத்து மோதச் செய்தனர். மூவரும் கீழே விழுந்த நிலையில், காரில் வந்தவர்கள், திவ்யாவை கடத்தி செல்ல முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிய மூவரும், ஜிகினி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து, சூர்யா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாரளிக்க அனுப்-பினர். அதன்படி அவர்கள் புகார் படி, சூர்யா நகர் போலீசார் விசா-ரிக்கின்றனர்.