ADDED : மே 22, 2025 01:21 AM
கெலமங்கலம், ஓசூர், பாகலுார் சாலை என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியை சேர்ந்தவர் தனஞ்செயன், 59. கெலமங்கலம் அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்த நிறுவனத்தில், தேன்கனிக்கோட்டை அடுத்த அலசெட்டியை சேர்ந்த முனிராஜ், 24, என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, கம்பெனியில் இருந்த, 52,000 ரூபாய் மதிப்புள்ள, 51 கிலோ காப்பர் ஒயரை முனிராஜ் திருடியதாக, மேலாளர் தனஞ்செயன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, முனிராஜை கைது செய்தனர்.