/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தென்பெண்ணையில் திறக்கப்படும் நீரில் தொடர்ந்து 7வது நாளாக ரசாயன நுரை தென்பெண்ணையில் திறக்கப்படும் நீரில் தொடர்ந்து 7வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணையில் திறக்கப்படும் நீரில் தொடர்ந்து 7வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணையில் திறக்கப்படும் நீரில் தொடர்ந்து 7வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணையில் திறக்கப்படும் நீரில் தொடர்ந்து 7வது நாளாக ரசாயன நுரை
ADDED : மே 22, 2025 01:21 AM
ஓசூர் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,101 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால், நேற்று காலை அணைக்கு வரத்தான, 1,410 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், நேற்று, 3வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என, வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கர்நாடகாவிலிருந்து தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் வருவதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில், ரசாயன நுரை ஏற்பட்டு வருகிறது. அதனால், தென்பெண்ணை ஆற்றில், 7வது நாளாக தொடர்ந்து ரசாயன நுரை பெருக்கெடுத்து, காற்றில் பறந்து அருகே விவசாய நிலங்களில் படிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், நேற்று காலை அணை பகுதியில் ஆய்வு செய்தார். ரசாயன நுரை வெளியேறுவதை பார்வையிட்ட அவர், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு சென்றார்.