/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பேக்கரியில் தகராறு இருவர் மீது வழக்கு பேக்கரியில் தகராறு இருவர் மீது வழக்கு
பேக்கரியில் தகராறு இருவர் மீது வழக்கு
பேக்கரியில் தகராறு இருவர் மீது வழக்கு
பேக்கரியில் தகராறு இருவர் மீது வழக்கு
ADDED : அக் 24, 2025 12:58 AM
ஓசூர், ஓசூர், அடுத்த அம்மன் நகரை சேர்ந்தவர் மணீஷ், 42, அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த, 20 இரவில் மத்திகிரியை சேர்ந்த தவுசிப், ரிகான் ஆகிய இருவர் பேக்கரிக்கு வந்து 'பப்ஸ்' ஆர்டர் செய்தனர். நீண்ட
நேரமாகியும் கொடுக்கவில்லை எனக்கூறி மணீசிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், பேக்கரியின் ஷோகேஸ் கண்ணாடி, மேஜைகளை அடித்து உடைத்து சென்றனர். இது குறித்து மணீஷ் புகார் படி, மத்திகிரி போலீசார் ரகளையில் ஈடுபட்ட தவுசிப், ரிகான் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


