மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு
மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு
மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2025 06:49 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், உரிய அனுமதியின்றி டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் பல டன் அளவிற்கு மண்ணை வெட்டி கடத்தியதாக, உத்தனப்பள்ளி போலீசில் வி.ஏ.ஓ., சசிக்குமார் புகார் செய்தார்.
அதன்படி, உத்தனப்பள்ளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த நவீன், 32, ஆனந்த், 37, உத்தனப்பள்ளியை சேர்ந்த முனிகிருஷ்ணன், 38, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்த சிவப்பா, 40, ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே, நொகனுார் சென்-ராயன் ஏரியில் உரிய அனுமதியின்றி, 50 யூனிட் மண்ணை வெட்டி திருடியதாக, அந்தேவனப்பள்ளி வி.ஏ.ஓ., கவுரம்மாள், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். நொகனுாரை சேர்ந்த முருகன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்-றனர்.