/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காமராஜர் பிறந்த நாள்; காங்., கொண்டாட்டம்காமராஜர் பிறந்த நாள்; காங்., கொண்டாட்டம்
காமராஜர் பிறந்த நாள்; காங்., கொண்டாட்டம்
காமராஜர் பிறந்த நாள்; காங்., கொண்டாட்டம்
காமராஜர் பிறந்த நாள்; காங்., கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி: கிழக்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் விழா நேற்று கொண்-டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு, மாநில பொதுச் செயலாளர் ஏகம்ப-வாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து, பொதுமக்க-ளுக்கு இனிப்பு வழங்கினர். காங்., கட்சி துணைத்தலைவர் ரகமத்-துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் லலித் ஆண்டனி வர-வேற்றார். * ஊத்தங்கரை அடுத்த, கஞ்சனுாரில், காங்., கட்சியினர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். காங்., மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்., -எம்.பி., கோபிநாத் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். * ஓசூர் மாநகர, காங்., கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாளை-யொட்டி, மாநகர தலைவர் தியாகராஜன் தலைமையில், எம்.ஜி.,ரோட்டிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்-டது. தொடர்ந்து, நேதாஜி ரோட்டில் உள்ள மேற்கு மாவட்ட, காங்., அலுவலகத்தின் முன், காமராஜர் உருவப்படம் வைக்கப்-பட்டு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட மகளி-ரணி தலைவி சரோஜம்மா, மாவட்ட காங்., துணைத்தலைவர் கீர்த்-திகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.