Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

ADDED : மே 12, 2025 02:41 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்-நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் மாணவர் சுனில், 600க்கு, 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்-துள்ளார். அதே போல், பள்ளி அளவில் ராகுல்கவுசிக், 594 மதிப்-பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஸ்ரீபிரியா, 593 மதிப்-பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதே போல் திருப்பத்துார், வேப்பனஹள்ளி, சூளகிரி, தேன்க-னிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் செயல்-பட்டு வரும் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பர்-கூரில் பாராட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். இதில் வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.பி., தம்பி-துரை, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஜெயபால், வெற்றிச்-செல்வன், பள்ளி முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜலஜாக்சி, தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளி பொறுப்பாளர் யுவராஜ், வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் முதல்வர்கள் ராஜேந்திரன், அன்பழகன், விவேக், பூங்காவனம், டேனிஷ்ஜோசப், வினோத், ஹாசாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us