/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/20 சதவீத போனஸ் கேட்டு வங்கி ஊழியர்கள் தர்ணா20 சதவீத போனஸ் கேட்டு வங்கி ஊழியர்கள் தர்ணா
20 சதவீத போனஸ் கேட்டு வங்கி ஊழியர்கள் தர்ணா
20 சதவீத போனஸ் கேட்டு வங்கி ஊழியர்கள் தர்ணா
20 சதவீத போனஸ் கேட்டு வங்கி ஊழியர்கள் தர்ணா
ADDED : ஜன 06, 2024 07:17 AM
தர்மபுரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், தர்மபுரியில் தர்ணா போராட்டம் நடந்தது.அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஊழியர் கடன்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த வட்டி விகிதம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்குவதற்கு புதிய நடைமுறையின்படி மேலாண்மை இயக்குனர், முதன்மை நிர்வாக அலுவலர், பொது மேலாளர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அறிவழகன், மாவட்ட பொதுச்செயலாளர் சாமிகண்ணு, மாவட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் பழனிவேல், சூடாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.