/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 14, 2025 05:08 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்-லுாரியில், கல்வி கடன், மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆதார் முகாம், உதவித்தொகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தனித்-தனியாக நடந்தன.
கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் (பொறுப்பு) தலைமை வகித்து, கல்விக்கடன், மருத்துவ காப்-பீட்டு திட்டங்கள், தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்ட உதவித்-தொகை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்-தொகை திட்டங்கள், அரசின் கல்வி உதவி தொகை பெறும் திட்-டங்கள், எல்.ஐ.சி., வழங்கும் கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் திட்டம் ஆகியவை குறித்து, முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்-டாமாண்டு மாணவ, மாணவியருக்கு விளக்கினார்.தமிழ்த்துறை பேராசிரியை ஜஸ்டினா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சீனியர் கிளை மேலாளர் வாணி, ஆசிரியர்கள் சரளா, மஞ்சு பார்கவி, கார்த்திக், விஜயலட்சுமி, இந்தியன் போஸ்டல் பேமெண்ட் வங்கி அதிகாரிகள் நித்யானந்தன், மோகனபிரியா, ஸ்காலர்ஷிப் நோடல் ஆசிரியர் சுந்தரம், துறைத்தலைவர் புவி-யரசு உட்பட பலர் பங்கேற்றனர்.