/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பா.ஜ., ஒன்றிய தலைவர் மீது தாக்குதல்பா.ஜ., ஒன்றிய தலைவர் மீது தாக்குதல்
பா.ஜ., ஒன்றிய தலைவர் மீது தாக்குதல்
பா.ஜ., ஒன்றிய தலைவர் மீது தாக்குதல்
பா.ஜ., ஒன்றிய தலைவர் மீது தாக்குதல்
ADDED : ஜன 11, 2024 11:20 AM
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த எலவடையை சேர்ந்தவர் ராஜசேகர், 38; இவர் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் கதிர்நாயக்கனஹள்ளியில் ரேஷன் கடை முன், வைத்திருந்த பேனரில் இருந்த ராஜசேகர் படத்தை பத்தலஹள்ளியை சேர்ந்த செல்லதுரை, 28; மதி, 31; சென்னப்பன், 36; விமல், 30; ஆகிய, 4 பேரும்
பத்தலஹள்ளியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் வைத்து எரித்துள்ளனர்.
தகவலறிந்து ராஜசேகர்
தன்னுடன், போடம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன், 29, என்பவரை அழைத்துக் கொண்டு பொலீரோ காரில் பத்தலஹள்ளி சென்றனர். அப்போது செல்லதுரை, மதி, சென்னப்பன், விமல் ஆகியோர் ராஜசேகர், மணிவண்ணனை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், காரின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்துள்ளனர். இது குறித்து ராஜசேகர் அளித்த புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரை, மதி உள்ளிட்ட நான்குபேரையும் தேடி வருகின்றனர்.