சுயேட்சை எம்.பி. பதவியேற்க என்.ஐ., ஏ. கோர்ட் அனுமதி
சுயேட்சை எம்.பி. பதவியேற்க என்.ஐ., ஏ. கோர்ட் அனுமதி
சுயேட்சை எம்.பி. பதவியேற்க என்.ஐ., ஏ. கோர்ட் அனுமதி
UPDATED : ஜூலை 01, 2024 08:32 PM
ADDED : ஜூலை 01, 2024 08:24 PM

புதுடில்லி: திகார் சிறையில் இருந்து கொண்டு லோக்சபா சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ரஷீத் , நாளை எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ.,அனுமதி வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்றடித்தார்.ரஷீத் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக 2019-ம் கைது செய்ப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நடந்த லோக்சபா தேர்தலில் சிறையிலிருந்து கொண்டே பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தான் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ, கோர்ட்டில் ரஷீத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா அனுமதி வழங்கினார். இதையடுத்து என்.ஐ.ஏ., போலீஸ் பாதுகாப்புடன் நாளை (ஜூலை02) பாராளுமன்றத்தில் எம்.பி.,யாக பதவியேற்க உள்ளார்.