/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜன., 10, 11ல் அண்ணாமலை வருகைகிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜன., 10, 11ல் அண்ணாமலை வருகை
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜன., 10, 11ல் அண்ணாமலை வருகை
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜன., 10, 11ல் அண்ணாமலை வருகை
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜன., 10, 11ல் அண்ணாமலை வருகை
ADDED : ஜன 07, 2024 10:44 AM
ஓசூர்: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 10, 11 ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்,'' என, மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறினார்.
ஓசூரிலுள்ள, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி பார்லிமென்ட் தொகுதியில் வரும், 10 மற்றும் 11 ல் என இருநாட்கள், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' நடைபயண சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளிலும் பொதுமக்களின் குறைகளை அறிந்து, தொழில்முனைவோர், பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார்.
வரும், 10 ம் தேதி காலை ஊத்தங்கரை சட்டசபை தொகுதி, மதியம் பர்கூர் சட்டசபை தொகுதியில், 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை மேற்கொள்கிறார். மாலையில் கிருஷ்ணகிரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 11 ம் தேதி காலை, 11:00 மணிக்கு, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டையிலும், மதியம், 3:00 மணிக்கு தளியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஓசூரில் மாலை, ஜி.ஆர்.டி., சர்க்கிள் பகுதியில் இருந்து நடைபயணமாக வந்து, ஓசூர் ராம்நகர் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். வழி நெடுகிலும் மக்களை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில், 2024 பார்லிமென்ட் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, பிரதமர் மோடி கையில் சமர்ப்பிக்கும் காரியங்களை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ., கட்சி மிகப்பெரிய இயக்கமாக வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், பொதுச்செயலாளர் விஜயகுமார், செயலாளர் பிரவீன்குமார், துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.