/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிறந்த நாள் கொண்டாட்டம் அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 08, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம், பர்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான கே.பி.முனுசாமியின், 74வது பிறந்த நாள் விழா நேற்று பர்கூரில் கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை வகித்தார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, 500 ஏழை பெண்களுக்கு புடவைகளும், ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளி, மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி மற்றும் அரசு மறுவாழ்வு இல்லவாசிகள் என மொத்தம், 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சுமதி ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகர செயலாளர் கணேசன், முன்னாள் நகர செயலாளர்கள் ஜெயராமன், துரைஸ் ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மாதையன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜா, பழனி சரவணன், வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.