ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
ஓசூர்: திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் அடுத்த போயம்பாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் பரணிதரன், 22.
இவர் நேற்று முன்தினம் காலை, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், யமகா பைக்கில் சென்றார். காமன்தொட்டி கிராமம் அருகே காலை, 9:20 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த காரை டிரைவர் எந்த சிக்னலும் செய்யாமல் வலதுபுறமாக திரும்பினார். இதனால் காரின் பின்னால் பைக்கால் மோதிய பரணிதரன், நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி பரணிதரன் மீது ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.