/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்று நட வேண்டுகோள்பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்று நட வேண்டுகோள்
பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்று நட வேண்டுகோள்
பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்று நட வேண்டுகோள்
பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்று நட வேண்டுகோள்
ADDED : ஜூன் 28, 2024 01:43 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான, மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திலே, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் குறித்தும், ஒவ்வொரு துறையும் இத்திட்டத்தின் கீழ் நடத்த வேண்டிய நிகழ்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிதல் வேண்டும். குறிப்பாக, கல்வித்துறை, போலீஸ், சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மருத்துவ துறையினருக்கு திட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், பிறப்புக்கு முன்பு, பாலின அடிப்படையில் கரு அழிக்கப்படுவதை தடுக்கும் விதமாக, அனைத்து ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை போற்றி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். சுகாதாரம், ஊட்டச்சத்து, மாதவிடாய் பற்றிய கல்வி, வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவற்றில், வளர் இளம் பருவத்தினருக்கான உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை திருமணம் நடைபெறா கிராமம் என உருவாக, கிராமங்களை ஊக்குவித்து பெருமைபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் , ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.