/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உலக சுற்றுச்சூழல் மாதம் 50 மரக்கன்றுகள் நடல் உலக சுற்றுச்சூழல் மாதம் 50 மரக்கன்றுகள் நடல்
உலக சுற்றுச்சூழல் மாதம் 50 மரக்கன்றுகள் நடல்
உலக சுற்றுச்சூழல் மாதம் 50 மரக்கன்றுகள் நடல்
உலக சுற்றுச்சூழல் மாதம் 50 மரக்கன்றுகள் நடல்
ADDED : ஜூன் 28, 2024 01:43 AM
ஓசூர், உலக சுற்றுச்சூழல் மாதத்தையொட்டி, இந்துஸ்தான் யுனிலிவர் கம்பெனி மற்றும் அதன் சமூக மேம்பாட்டு திட்ட அமைப்பான மைராடா சமூக நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த நிகழ்ச்சி, பூனப்பள்ளி கிராமத்தில் நடந்தது.
இதில், பூனப்பள்ளியை சுற்றியுள்ள ஏரியை, நாம் எவ்வாறு துாய்மையாக வைத்துக் கொள்வது, ஏரியை நாம் எவ்வாறு துார்வாருவது, ஏரியிலுள்ள கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் ஏரியில் கிடைக்கும் நீரை நாம் எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் மற்றும் அதை எவ்வாறு பராமரிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும், பூனப்பள்ளி கிராம சுற்றுச்சூழல் நலன் கருதி, பூனப்பள்ளி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மைராடா நிறுவனத்தின், திட்ட அமைப்பாளர் ஜோஸ்வா செய்திருந்தார்.