/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புரட்டாசியில் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் புரட்டாசியில் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புரட்டாசியில் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புரட்டாசியில் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புரட்டாசியில் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : செப் 22, 2025 02:06 AM
கிருஷ்ணகிரி:பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, சைவம் சாப்பிட்டு விரதம் இருப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த, 17-ல் துவங்கியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். புரட்டாசி மாதம் துவங்கியதால் நேற்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. கிருஷ்ணகிரி சந்தைபேட்டை இறைச்சி கடைகள், பழையபேட்டை மீன் மார்க்கெட் மற்றும் ராயக்கோட்டை சாலையில் உள்ள கடல்மீன் கடைகளில் மக்கள் வெகுவும் குறைவாகவே இருந்தனர்.
மாறாக, கிருஷ்ணகிரி காந்திசாலையில் உள்ள உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று, 25,350 கிலோ காய்கறிகள், 6,610 கிலோ பழங்கள், 50 கிலோ பூக்கள் மற்றும் மற்ற விளைப்பொருட்கள், 1,650 கிலோ என மொத்தம், 33,660 கிலோ விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இறைச்சி விற்பனை 'டல்'
கடந்த புதன்கிழமை புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, மாவட்டத்தில் இறைச்சி விற்பனை குறைந்தது. நேற்று, தர்மபுரி டவுன், ஒட்டப்பட்டி, பழைய கோட்ரஸ் பகுதியில் செயல்படும் ஆட்டிறைச்சி கடைகளில் விற்பனை குறைந்து, கடைகள் வெறிச்சோடின.
* புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அரூரில் உள்ள இறைச்சி கடைகளில், மக்கள் கூட்டமின்றி, ஆடு, கோழி, மீன் விற்பனை வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். புரட்டாசி மாதம் என்பதால், தடுப்பணையில் மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.