/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பழுதாகி சாலையோரம் கவிழ்ந்த அரசு டவுன் பஸ் பழுதாகி சாலையோரம் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்
பழுதாகி சாலையோரம் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்
பழுதாகி சாலையோரம் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்
பழுதாகி சாலையோரம் கவிழ்ந்த அரசு டவுன் பஸ்
ADDED : ஜூன் 10, 2025 01:14 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரியிலிருந்து போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டிக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு, 47 எண் டவுன் பஸ், நெடுங்கல் ஏரியை ஒட்டிய சாலையில் சென்றது. அப்போது, பஸ்சின் ஸ்பிரிங் பட்டை உடைந்ததால், பஸ் நிலை தடுமாறி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏரிக்குள் பாய்ந்த நிலையில், அங்கிருந்த பனைமரத்தில் மோதி சாய்ந்தது.
இதில் பஸ்சில் பயணித்த 20 பெண்கள், 10 ஆண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அருகிலிருந்த பொதுமக்கள், பயணிகளை பத்திரமாக மீட்டனர். குறுக்கே பனைமரம் இருந்ததால் உயிரிழப்பு, அசம்பாவிதம் ஏற்படாமல் பயணிகள் உயிர் தப்பினர். அரசு பஸ்களை சரியாக பராமரிக்காமல் கவனக்குறைவாக இருந்ததே விபத்துக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.